தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இன்று முதல் வழமை போல் இயங்கும்!

#SriLanka #Lanka4 #national #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை இன்று முதல் வழமை போல் இயங்கும்!

ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று (20) முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இதன்படி, ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு பிரிவுகளின் ஊடாகவும் பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்படுத்தல்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னதாக, கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒரு நாள் சேவை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சாதாரண சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4