பொருளாதார நெருக்கடியால் ஆட்டம் காணும் இலங்கை குடும்பங்கள்: பாரிய சமூக மாற்றம் குறித்து எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Warning #family #Economic #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பொருளாதார நெருக்கடியால் ஆட்டம் காணும் இலங்கை குடும்பங்கள்: பாரிய சமூக மாற்றம் குறித்து எச்சரிக்கை!

நாட்டில் ஒருவரை மாத்திரம் கொண்ட தனிக்குடும்பங்கள் அதிகளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில், நாட்டின் குடும்பக் கட்டமைப்பு, குடும்பத் தலைவர்களின் பண்புகள், கல்வித் தகைமை மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் குறித்த தகவல்களிலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும். இதில் 58.9 சதவீதத்துடன் (3,598,976 குடும்பங்கள்) கருக் குடும்பங்கள் முதலிடத்தில் உள்ளன. கருக் குடும்பங்கள் என்பது பெற்றோர்கள் (தாய், தந்தை) மற்றும் அவர்களின் திருமணம் செய்யாத பிள்ளைகளை மாத்திரம் கொண்ட குடும்ப அமைப்பாகும்.

அதனைத் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்கள் 29.7 சதவீதமாக காணப்படுகிறது. இது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுடன் மேலதிகமாக நெருங்கிய உறவினர்களையும் (தாய் வழிஃதந்தை வழி உறவினர்கள், பேரப்பிள்ளைகள் போன்றவை) உள்ளடக்கிய குடும்ப அமைப்பாகும்.

தனிநபர் குடும்பங்கள் 10.5 சதவீதமாகவும் மிகவும் குறைந்த அளவாக கூட்டு குடும்பங்கள் 0.9 சதவீதம் மாத்திரமே பதிவாகியுள்ளன. அனைத்துத் துறைகளிலும் மாவட்டங்களிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கருக் குடும்பங்களாகவே உள்ளன. மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டம் அதிகளவான குடும்பங்களைக் கொண்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

தனிநபர் குடும்பங்கள் அதிகளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் (12.4 வீதம்), கருக் குடும்பங்கள் அதிகளவில் திருகோணமலை மாவட்டத்திலும் (68.1 வீதம்), விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்கள் அதிகளவில் கேகாலை மாவட்டத்திலும் (34.1 வீதம்) காணப்படுகின்றன. குடும்பத் தலைவர்களின் இனத்துவப் பரவலை ஆராயும்போது, சிங்கள இனத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் 58.4 வீத கருக் குடும்பங்களைக் கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களிடையே இது 59.9 வீதமாகவும், இலங்கை சோனகர்/முஸ்லிம்களிடையே 62.9 வீதமாகவும் காணப்படுகிறது. இந்திய வம்சாவளித் தமிழர்களிடையே விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்களின் சதவீதம் ஏனைய இனத்தவர்களை விட அதிகமாக (35.2 வீதம்) பதிவாகியுள்ளது.

ஏனைய' இனக்குழுமங்களில் தனிநபர் குடும்பங்களின் சதவீதம் (12.5 வீதம்) ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இலங்கையில் குடும்பத் தலைவர்களில் 73.5 சதவீதமானோர் ஆண்கள் மற்றும் 26.5 சதவீதமானோர் பெண்கள் ஆவர். நகர்ப்புறங்களில் பெண் குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை ஏனைய துறைகளை விட சற்று அதிகமாக (29.4 வீதம்) உள்ளது.

மாவட்ட ரீதியாக, மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான ஆண் குடும்பத் தலைவர்களும் (78.8 வீதம்), மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் குடும்பத் தலைவர்களும் (41.3 வீதம்) பதிவாகியுள்ளனர்.

வயது அடிப்படையில் நோக்கும்போது, 75 சதவீத குடும்பத் தலைவர்கள் 20 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். சுமார் 25 சதவீத குடும்பத் தலைவர்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவர்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் அதிகளவில் மாத்தறை மாவட்டத்தில் (30.3 வீதம்) பதிவாகியுள்ளன.

20 வயதிற்குக் குறைவான குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. குடும்பத் தலைவர்களின் திருமண நிலையைப் பொறுத்தவரை, 80.8 சதவீதமானோர் திருமணமானவர்கள். 

12.9 சதவீதமானோர் விதவையானவர்கள்/விதவைகளாக உள்ளனர். ஒருபோதும் திருமணம் செய்யாத குடும்பத் தலைவர்கள் 3.7 சதவீதமாக உள்ளனர்.

பெண் குடும்பத் தலைவர்களில் 84.4 சதவீதமானோர் விதவைகளாக இருப்பதையும், ஆண் குடும்பத் தலைவர்களில் 84.6 சதவீதமானோர் திருமணமானவர்களாக இருப்பதையும் தரவுகள் காட்டுகின்றன. கல்வித் தகைமையை ஆராயும்போது, தேசிய மட்டத்தில் 40.1 சதவீத குடும்பத் தலைவர்கள் 6-10 ஆம் தரம் வரை கல்வி பயின்றவர்கள்.

உயர்தரத்திற்கு மேல் கல்வி கற்ற குடும்பத் தலைவர்கள் 20.4 சதவீதமாக உள்ளனர். நகர்ப்புறங்களில் உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கற்ற குடும்பத் தலைவர்களின் சதவீதம் (34.6 வீதம்) மிக அதிகமாக உள்ளது.

மாறாக, ஒருபோதும் பாடசாலை செல்லாத குடும்பத் தலைவர்களின் சதவீதம் தோட்டப்புறங்களில் (சுமார் 12 வீதம்) அதிகமாகக் காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண் குடும்பத் தலைவர்களின் பங்களிப்பு மற்றும் கல்வித் தகைமை (குறிப்பாக உயர்தரம்) ஏனைய பகுதிகளை விட முன்னிலையில் உள்ளது.

இலங்கையின் மொத்தக் குடும்பங்களில் பெரும்பகுதி (4,827,055 குடும்பங்கள்) கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றன. இங்கு 59.6 வீத கருக் குடும்பங்கள் உள்ளன.

தோட்டப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்களின் சதவீதம் (39.4 வீதம்) ஏனைய துறைகளை விட மிக அதிகம். அதேநேரம், கல்வித் தகைமை மற்றும் பாடசாலை செல்லாதவர்களின் விகிதத்தில் இத்துறை பின்னடைவில் உள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!