பெண்களின் பாதுகாப்புக்கு புதிய பலம்: அதிரடி சட்டங்கள் மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகம்!

#SriLanka #Women #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
பெண்களின் பாதுகாப்புக்கு புதிய பலம்: அதிரடி சட்டங்கள் மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகம்!

நாட்டில் அண்மைக் காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (19) கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, பெண்களை வலுப்படுத்துவதற்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் ஊடாகக் கொள்கை ரீதியான மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

பெண்களைப் பாதுகாப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றை அவசரமாகச் சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நீதியமைச்சுடன் இணைந்து மகளிர் விவகார அமைச்சு பணியாற்றி வருகின்றது.

நீதியமைச்சு தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி சட்டத்தை மீளாய்வு செய்து வருவதுடன், அடையாளம் காணப்பட்ட பலவீனங்கள் மற்றும் சட்ட ஓட்டைகளை அடைப்பதற்கான பரிந்துரைகளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கி வருகின்றது.

கடந்த சில நாட்களில் ராகம, மொரகஹஹேன மற்றும் கொகரல்ல ஆகிய பகுதிகளில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இது தொடர்பாகப் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு.வூட்லர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்தந்தப் பகுதி நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4