மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியுடன் முன்னுரிமை பேருந்து சேவை தொடக்கம்!

#SriLanka #Bus #service #ImportantNews #L4
Lakhi
2 months ago
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியுடன் முன்னுரிமை பேருந்து சேவை தொடக்கம்!

மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி, பிரத்யேக வசதிகளுடன் கூடிய குறைந்த தள முன்னுரிமை பேருந்து சேவையானது இன்று (21) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் இதற்கு 430 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் முதற்கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஒரு பேருந்தில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். இதில் 33 இருக்கைகள் உள்ளன.

அத்துடன், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விசேட பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாகும்பூரவில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் மாகும்புர - கோட்டை (Pettah)மற்றும் மாகும்புர - கடவத்த ஆகிய இரண்டு பிரதான பாதைகளில் இயங்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் 40 நிமிட இடைவெளியில் இந்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4