இலங்கையில் இடி மின்னல் தாக்கியதில் 86 வயது முதியவர் மரணம்
#SriLanka
#Death
#NuwaraEliya
#Lanka4
#lightning
Prasu
2 months ago
இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நேற்று 20 ம் திகதி இரவு 7 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ரொக்வூட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.
இடி மின்னல் தாக்கியதில் 86 வயது உடைய கந்தன் ஆண்டி என்பவர் படு காயங்களுடன் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு பரிசோதித்த போது அவர் மரணித்து இருந்தது தெரியவந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே