உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை: தீவிரமடையும் எரிசக்தி தட்டுப்பாடு.

#SriLanka #Lanka4 #Warning #World #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை: தீவிரமடையும் எரிசக்தி தட்டுப்பாடு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, உலகம் தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை தற்போது எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Fatih Birol கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சிகளை விடவும் மிகக் கடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு நாளைக்கு சுமார் 13 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் சந்தையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளின் கூட்டுப் பாதிப்பை விடவும் அதிகமானது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை முற்றாகச் சிதைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4