நுண் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்தும் 'அதிசய மரம்': விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

#Health #Tree #Lanka4 #pollution #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
நுண் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்தும் 'அதிசய மரம்': விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

குடிநீரில் கலந்துள்ள நுண் பிளாஸ்திக் பிரச்சினையைத் தீர்க்க, பழங்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய முருங்கை விதை ஒரு சிறந்த தீர்வாக அமையும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், முருங்கை விதைகள் நீரிலிருந்து 98% க்கும் அதிகமான PVC நுண்பிளாஸ்திக்குகளை அகற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் 'அலுமினியம் சல்பேட்' (Alum) என்ற வேதிப்பொருளுக்கு இணையாகவும், சில நேரங்களில் அதைவிடச் சிறப்பாகவும் முருங்கை செயல்படுகிறது.

அலுமினியம் சல்பேட் பயன்பாட்டினால் நரம்பியல் கோளாறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஆனால், முருங்கை விதைகள் இயற்கையானவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4