உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம்

#SriLanka #School #Student #Kilinochchi #Tamil #Lanka4
Prasu
2 months ago
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம்

2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பிரசித்திபெற்ற கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

images/content-image/1776791893.jpg

இந் நிகழ்வில் 2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் திருக்குமரன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

images/content-image/1776791916.jpg

அத்துடன் ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

images/content-image/1776791935.jpg

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான இந்தப் பணியை நாமும் வாழ்த்துவோம். பரிசில்கள் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்.

images/content-image/1776791977.jpg

images/content-image/1776791996.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4