IPL M31 - 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

#Delhi #IPL #T20 #Cricket #hyderabad #2026
Prasu
2 months ago
IPL M31 - 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

19வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடை பெறும் 31வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

ஹெட் 37 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 135 ஓட்டங்களும் இஷான் கிஷான் 25 ஓட்டங்களும் கிளாசன் 37 ஓட்டங்களும் எடுத்தனர். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்தது.

இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது.

டெல்லி அணி சார்பில், கே.எல். ராகுல் 37 ஓட்டங்களும் நிதிஷ் ராணா 57 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4