இங்கிலாந்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுரங்க ரயில் ஓட்டுநர்கள்

#strike #Lanka4 #London #Driver #Workers
Prasu
1 month ago
இங்கிலாந்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுரங்க ரயில் ஓட்டுநர்கள்

RMT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுரங்க ரயில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

தொழிற்சங்கத்தின் அறிவிப்பின்படி முதல் நாள் வேலைநிறுத்தம் லண்டன் அண்டர்கிரவுண்டில் ஆரம்பமாகியது. அதேபோல் அடுத்த வேலைநிறுத்த போராட்டம் வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. 

வேலைநிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான வழித்தடங்களில் தாமதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டமானது தலைநகரின் பொது போக்குவரத்தை நான்கு நாள் பாதிக்கும் வகையில் முன்னெடுகக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4