வாக்குப்பதிவு நேரத்தை 8 மணி வரை நீடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்!

#India #Election #Tamil Nadu #Lanka4 #Vijay #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வாக்குப்பதிவு நேரத்தை 8 மணி வரை நீடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு ஆகியோரால் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி பேருந்து நிலையங்களில் தவித்து வருவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் தமது ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்ற ஏதுவாக, வாக்குப்பதிவு நேரத்தை இன்று இரவு 8.00 மணி வரை (மேலதிகமாக 2 மணித்தியாலங்கள்) நீடிக்குமாறு அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் ரகசியத்தன்மையைப் பேணுவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

வாக்குச் சீட்டை அல்லது வாக்களிக்கும் முறையைப் புகைப்படம் எடுப்பது மற்றும் அதனைப் பகிர்தல் சட்டப்படி குற்றமாகும்.

அத்தோடு, தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படுத்தினால், அவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4