இலங்கை செஞ்சிலுவை சங்கம் – கிளிநொச்சி கிளை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விநியோகம்!
நேற்றையதினம்(22.04.2026), இலங்கை செஞ்சிலுவை சங்கம் – கிளிநொச்சி கிளையில் கற்றல் உபகரணங்களை வழங்கும் மனிதாபிமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு Hong Kong Red Cross மற்றும் International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி முன்னேற்றத்தை ஆதரிக்கும் வகையில் கிளி/முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (School Packs) வழங்கப்பட்டன.
இவ்வுபகரணங்களில் மாணவர்களின் தினசரி கற்றல் தேவைகளுக்கு அவசியமான புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பிற கல்வி உதவிப்பொருட்கள் அடங்கியிருந்தன. நிகழ்வின் போது, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், எதிர்கால வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவான கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
குறிப்பாக, பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் குறிப்பாக மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் ஏனையவர்கள்(District Stakeholders) கலந்து கொண்டு, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சமூக தாக்கத்தையும் வலியுறுத்தினர்.
அவர்களின் பங்கேற்பு, சமூக ஒருங்கிணைப்பையும் மனிதாபிமான சேவைகளின் வளர்ச்சியையும் பிரதிபலித்தது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் – கிளிநொச்சி கிளை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மனிதாபிமான சேவைகளில் முன்னணியில் செயல்பட்டு வருகின்றது.
கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து, சமூகத்தின் பலவீனமான தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறது.
இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் மட்டுமல்லாது, சமூகத்தின் ஒற்றுமையையும் மனிதாபிமானப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு முயற்சியாகும்.
(வீடியோ இங்கே )