கிளிநொச்சி மக்களின் கவனத்திற்கு: முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு
நடைபெற்றுவரும் நூதன முறையிலான கொள்ளைச் சம்பவங்களிலிருந்து விழிப்படைந்து இருக்க வேண்டியே இதை பதிவிடுகிறோம் அண்மைக்காலமாக கிளிநொச்சி நகரை அண்டிய பல பகுதிகளில் இடம்பெறும் நூதனமான நுட்பமான கொள்ளைச் சம்பவங்களின் பிண்ணனியில் இருவர் அல்லது மூவர் கொண்ட கும்பலாக செயற்படுகின்றனர்.
அத்தோடு யார் வேலைக்கு செல்லும் தம்பதிகள்?அந்த நேரம் யார் வீட்டில் இருப்பார்கள்? கணவர் வேலைக்குச் சென்றால் அவரைக் கண்காணிக்க ஒருவன் மனைவி சந்தைக்குச் சென்றால் அவரைக் கண்காணிக்க ஒருவன்என்று காவல் காத்து நிலவரங்களை உடனுக்குடன் அறிவித்துப் தகவல் பகிர்ந்து பிடிபடாமல் இந்த காரியங்களைச் செய்கின்றனர்என அறிய முடிகிறது.
யாரும் நீண்ட நேரமாக உங்களைப் பின் தொடர்ந்தாலோ அல்லது உங்கள் சுற்றுச்சூழலில் புதியமுகங்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினாலோ உடனடியாக பொலிசாருக்கு அறிவியுங்கள்.
ஊரிலுள்ள அமைப்புக்களுக்கு அறிவியுங்கள். மீண்டும்,மீண்டும் கூறுகிறோம் அறிமுகம்இல்லாதவர்கள் உங்கள்வீடுகளுக்கு வந்தால் அல்லது உங்கள் சூழலில் நடமாடினால் எப்போதும் அவதானமாக இருங்கள்.
(வீடியோ இங்கே )