பிரித்தானியாவில் பெண்களுக்கான கட்டாய ராணுவ சேவை அறிமுகப்படுத்தப்படும் அபாயம்

#Women #Lanka4 #Soldiers #England #Military #WorldWar
Prasu
3 hours ago
பிரித்தானியாவில் பெண்களுக்கான கட்டாய ராணுவ சேவை அறிமுகப்படுத்தப்படும் அபாயம்

மூன்றாம் உலகப்போர் உருவாகுமானால், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பிரித்தானிய இளம்பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும் கட்டாய நிலை உருவாகலாம்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, இரண்டாம் உலகப்போரின்போது, திருமணமாகாத, தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இளம்பெண்கள், தேசிய சேவைச் சட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் அது கட்டாயமாகவும் இருந்தது. விடயம் என்னவென்றால், அவர்கள் போர்க்களத்தின் முன்னணியில் நின்று போரிட அனுப்பப்படவில்லை. 

மாறாக, அவர்கள் பெண்கள் கடற்படை சேவை, துணை பிராந்திய சேவை, மற்றும் மகளிர் துணை விமானப்படை ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் என்னும் ஒரு சூழல் உருவாகும் நிலையில், ராணுவத்தை வலுப்படுத்தவேண்டிய நிலை பிரித்தானியாவுக்கு ஏற்படுமானால், பெண்களும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 

இஸ்ரேல், நோர்வே, டென்மார்க் போன்ற சில நாடுகள் இளைஞர்களுக்கு ஈடாக இளம்பெண்களையும் ராணுவத்தில் சேர்த்துவருகின்றன குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!