IPL M36 - இமாலய இலக்கை எட்டி ராஜஸ்தானை வீழ்த்திய ஐதராபாத்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Rajasthan
#2026
Prasu
4 hours ago
ஐ.பி.எல்.தொடரின் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 103 ஓட்டங்களும் துருவ் ஜூரெல் 51 ஓட்டங்களும் டொவோவன் ஃபெரைரா 33 ஓட்டங்களும் குவித்தனர்.
தொடர்ந்து, 229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட 229 இலக்கை எட்டியது.
ஐதராபாத் சார்பில், இஷான் கிஷன் 74 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 51 ஓட்டங்களும் நிதிஷ் குமார் ரெட்டி 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
இறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது.
(வீடியோ இங்கே )