நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அதிரடி கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
#ADDA
#Archuna
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில், துப்பாக்கியை காண்பித்து பெண்ணொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, இளவாளை காவல்நிலையத்தில் இன்று காலை முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டதாக பதில் காவல்துறை பேச்சாளர் மினுர செனரத் சூரியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இளவாலை பெரியவிளான் பகுதியில், காணி பிரச்சினை தொடர்பில் நேற்று முன்தினம் துப்பாக்கியை கையில் வைத்திருந்த நிலையில், பெண்களை அச்சுறுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )