மே தினத்தில் ஒன்றிணைவோம் - ஐக்கிய தேசியக் கட்சிக்கு சஜித் உத்தியோகபூர்வ அழைப்பு

#SriLanka #Sajith Premadasa #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
மே தினத்தில் ஒன்றிணைவோம் - ஐக்கிய தேசியக் கட்சிக்கு சஜித் உத்தியோகபூர்வ அழைப்பு

எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினப் பேரணியில் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பி.டி.சிரிசேன மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நாட்டைப் பற்றி சிந்தித்து நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய முற்போக்கு சக்திகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்" என அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4