கொழும்பில் பரபரப்பு: நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் மீது தாக்குதல்.

#SriLanka #Colombo #Attack #Lanka4 #Ministry of Education #Finance #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கொழும்பில் பரபரப்பு: நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் மீது தாக்குதல்.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை இலக்கு வைத்து அங்கிருந்தவர்களால் முட்டை மற்றும் சாண வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசு உயர் அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்னால் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!