தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இசையால் வலுச்சேர்த்த தேனிசை செல்லப்பா காலமானார்

#SriLanka #Death #Lanka4 #Chennai #Song #Eelam
Prasu
1 hour ago
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இசையால் வலுச்சேர்த்த தேனிசை செல்லப்பா காலமானார்

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று (27) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசைப்பாடல்களால் வலுச் சேர்த்த தேனிசை செல்லப்பா கடந்த 21ம் திகதி தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

1980களில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைக்காக தனது இசைப்பாடல்களால் உழைத்தவர் தேனிசை செல்லப்பா.

1990ம் ஆண்டு யாழ்ப்பாணம், முற்றவெளியில் தொடங்கி, தமிழர் தாயகப் பகுதிகளில் எழுச்சிப் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். 

புலம்பெயர் தேசங்களிலும் அவரது பெருமளவு இசை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. ஏராளமான எழுச்சிப் பாடல்களால் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து தேனிசை செல்லப்பாவின் பாடல்களை பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு அவர் பங்களித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசைப்பாடல்களால் வலுச் சேர்த்த தேனிசை செல்லப்பா கடந்த 21ஆம் திகதி தனது 85வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

1980களில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைக்காக தனது இசைப்பாடல்களால் உழைத்தவர் தேனிசை செல்லப்பா. 

1990ம் ஆண்டு யாழ்ப்பாணம், முற்றவெளியில் தொடங்கி, தமிழர் தாயகப் பகுதிகளில் எழுச்சிப் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். புலம்பெயர் தேசங்களிலும் அவரது பெருமளவு இசை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!