சம்பா அரிசி விற்பனையில் மோசடி: கொழும்பு வர்த்தகருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!

#SriLanka #Colombo #rice #Lanka4 #Punishment #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சம்பா அரிசி விற்பனையில் மோசடி: கொழும்பு வர்த்தகருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசி விற்பனை செய்த கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11, ஐந்தாவது குறுக்குத் தெரு பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடை ஒன்றிற்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையாக 240 ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த கடையில் 5 கிலோகிராம் சம்பா அரிசிப் பொதி 1425 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதாவது ஒரு கிலோகிராம் அரிசி 285 ரூபா வீதம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை சுற்றிவளைப்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த வர்த்தகர் இதற்கு முன்னரும் இருமுறை இவ்வாறான குற்றங்களைச் செய்துள்ளமை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு 200,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!