இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டப் பாதை!
1893 ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தம் இலங்கையின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டமாக கருதப்படுகிறது.
ஏ.ஈ. குணசிங்க அவர்கள் இலங்கையின் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆரம்பத்தில் ஊதிய உயர்வுக்காகத் தொடங்கிய போராட்டங்கள், காலப்போக்கில் நாட்டின் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.
1923 ரயில்வே வேலைநிறுத்தம் மற்றும் 1947 அரச சேவை வேலைநிறுத்தம் ஆகியவற்றை வரலாற்றின் முக்கிய மைல்கற்களாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கு உழைக்கும் மக்களே உண்மையான "முன்னோடிகள்" என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள், துறைமுக மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் உழைப்புக்கு அவர் தனது நன்மதிப்பைத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )