திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் ஆராய விசேட மருத்துவக் குழு நியமனம்!!
#SriLanka
#Investigation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
மர்மமான முறையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரி ரங்கா ராஜபக்சவின் பிரேத பரிசோதனையை முன்னெடுப்பதற்கு சிறப்பு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நான்கு சிரேஷ்ட தடயவியல் மருத்துவ நிபுணர்கள் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, இந்த மரணம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய நான்கு பேர் கொண்ட விசேட மருத்துவக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே