ஹஜ் யாத்திரை ஆரம்பம் - முதல் குழு நாட்டைவிட்டு புறப்பட்டது!
#SriLanka
#Hajj
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், 325 பேர் கொண்ட முதல் குழுவினர் நாட்டைவிட்டு புறப்பட்டுள்ளனர்.
அவர்களின் புனித பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் விமான நிலைய புறப்பாடு முனையத்தில் ஒரு விழா நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதர் காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை 2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைப் பருவத்திற்காக, மொத்தம் 3,500 இலங்கை யாத்ரீகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சவுதியா விமான நிறுவனம் மட்டுமின்றி, கத்தார் ஏர்வேஸ் மூலமாகவும் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே