கனடா மருத்துவமனையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்

#Arrest #Police #Canada #Hospital #Weapons #Lanka4
Prasu
4 hours ago
கனடா மருத்துவமனையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்

கனடாவின் நயாகரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளி ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்தனர்.

முதற்கட்ட சோதனையில், அவர் வைத்திருந்தது ஒரு போலி துப்பாக்கி என்பது தெரியவந்தது. எனினும், அவரது நன்னடத்தை விதிகளின்படி அவர் ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மேலும் பல ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், அவரது வீட்டை போலீசார் ஆய்வு செய்தபோது இரண்டு .22 கேலிபர் சுவிட்ச் துப்பாக்கிகள், 22 கேலிபர் கைத்துப்பாக்கி மற்றும் 3 போலி துப்பாக்கிகள், ஷாட்கன் பீப்பாய் மற்றும் பிற துப்பாக்கி பாகங்கள் , 12கேஜ் ஷாட்கன் மேகசின் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் , தடை செய்யப்பட்ட பித்தளை கத்தி போன்றவற்றை மீட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!