கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல் : ஏமன் அறிவிப்பு!
#SriLanka
#Somalia
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
எம்/டி யுரேகா என்ற எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டு சோமாலிய கடற்கரை பக்கமாக செலுத்தப்பட்டுள்ளதாக யேமன் கடலோர காவல்படை இன்று தெரிவித்துள்ளது.
ஷப்வா மாகாணக் கடற்கரைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் கப்பலில் ஏறி அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதைக் கண்காணிக்கவும், மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கப்பலில் பணிப்புரிந்த பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பணியாற்றிவருவதாக கடலோர காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )