வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் - பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்கு மேல் கடுமையான மழை பொழிவு பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே )