பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மரணம்

#Death #France #Lanka4 #migrants #Boat #L4
Prasu
1 hour ago
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மரணம்

சூடானைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரண்டு பெண்கள், வடக்கு பிரான்சிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு சிறிய படகில் கடக்க முயன்றபோது உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 வயதுகளில் இருப்பதாக நம்பப்படும் அந்தப் பெண்கள், 82 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகில் இருந்ததாக, பிராந்திய அரசாங்க அதிகாரி கிறிஸ்டோஃப் மார்க்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இயந்திரம் திடிரென இயங்காததால் படகு அடித்துச் செல்லப்படத் தொடங்கியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடலில் பதினேழு பேர் மீட்கப்பட்டு, பூலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீதமிருந்த 65 பேருடன் இருந்த அந்தப் படகு, இறுதியில் பூலோன்-சுர்-மெர்-க்கு தெற்கே சுமார் 12 கி.மீ (7 மைல்) தொலைவில் உள்ள நியூஃபாட்செல்-ஹார்டெலோட் அருகே ஒரு கடற்கரையில் தரைதட்டியுள்ளது.

இந்நிலையில், படகுகளில் அதிக மக்கள் நெருக்கமாக அடைக்கப்படும்போது, ​​துரதிர்ஷ்டவசமாக இரண்டு பெண்கள் நசுக்கப்பட்டோ அல்லது மூச்சுத்திணறியோ இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!