இலங்கையின் வானிலையில் மாற்றம்: பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Province #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இலங்கையின் வானிலையில் மாற்றம்: பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல மாகாணங்களில், குறிப்பாக மேல், சபரகமுவா மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரித்து நிலவக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வானிலை மாற்றங்கள் குறித்த மேலதிக அறிவிப்புகளை அவதானிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!