யாழ் போதனா மருத்துமனையில் தீ விபத்து!
#SriLanka
#Jaffna
#Hospital
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல்களின்படி, மருத்துவமனையின் மருத்துவக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் யாழ்ப்பாண மாநகர சபைத் தீயணைப்புப் படை, மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் அல்லது சேதத்தின் அளவு குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
பொலிஸ் அதிகாரிகள் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே