தீ விபத்து தொடர்பில் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

#SriLanka #Jaffna #Hospital #people #Director #fire
Soruban
1 month ago
தீ விபத்து தொடர்பில் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை, பொதுமக்கள் வழக்கம்போல் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சிய பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும் வைத்தியசாலை ஊழியர்கள், மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதிகமான மருந்துகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீயால் எரிந்த மருந்துகளின் அளவு மற்றும் சேத விபரம் தற்போது கணக்கிடப்பட்டு வருகிறது.

வைத்தியசாலையின் உள்ளக மருந்து களஞ்சியங்கள், இண்டோர் பார்மசி மற்றும் கிளினிக் பிரிவுகளில் உள்ள மருந்துகள் பாதிக்கப்படாததால் வழமைபோல் மருந்து வழங்கும் சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுகாதார அமைச்சு மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வருகை தர உள்ளதாகவும், தேவையான மருந்துகள் அயல் வைத்தியசாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. மின்சார ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4