இந்தியாவில் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கான ஒன்பதாவது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நிறைவு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இந்தியாவில் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கான ஒன்பதாவது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நிறைவு!

இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் (National Centre for Good Governance - NCGG) இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் 40 பேருக்காக நடத்தப்பட்ட ஒன்பதாவது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் மே 08 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

‘அனர்த்த முகாமைத்துவம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரு வாரங்கள் நடைபெற்ற இத்திட்டம், முந்தைய பயிற்சி குழுக்களிடமிருந்து கிடைத்த சாதகமான பின்னூட்டங்களையும், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) முன்வைத்திருந்த விசேட கோரிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்திட்டம், 2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரச உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட NCGG-SLIDA புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) இரண்டாவது ஆண்டுக் கட்ட செயல்பாட்டின் தொடக்கத்தை குறிக்கிறது.

இந்த கூட்டாண்மை, ஐந்து ஆண்டுகளில் 1500 இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் முதல் ஆண்டான 2025-26 காலப்பகுதியில் 321 அதிகாரிகள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இப்பயிற்சி திட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவம், அனர்த்தத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிப்பு குறைப்புத் திட்டங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பல அமர்வுகள் இடம்பெற்றன.

மேலும், PM Gati Shakti, GeM, Swamitva திட்டம், Aadhaar, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு (Digital Public Infrastructure) மற்றும் இந்திய மாநிலங்களின் அனர்த்த முகாமைத்துவ அனுபவங்கள் போன்ற இந்தியாவின் முக்கிய முயற்சிகள் தொடர்பாக அதிகாரிகள் அறிவைப் பெற்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய அனர்த்த முகாமைத்துவ ஆணையம் (NDMA), தேசிய அனர்த்த பதிலளிப்பு படை (NDRF), மாநில அனர்த்த பதிலளிப்பு படை (SDRF), பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு களப்பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் இந்தியாவின் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள் மற்றும் நல்லாட்சி கட்டமைப்புகள் தொடர்பான நடைமுறை அனுபவங்களைப் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.

இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி ஒத்துழைப்பில் திறன் மேம்பாடு முக்கிய தூணாக தொடர்கிறது. 

2025 ஏப்ரலில் இந்திய பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட அரச உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஆண்டுதோறும் மேலதிகமாக 700 பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தியா ஆண்டுதோறும் 1000 இலங்கையர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கி வருகிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவடைந்துவரும் இருதரப்பு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.

லங்கா4 (Lanka4) 

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!