IPL M53 - சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Chennai
#Lucknow
Prasu
1 month ago
ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய இங்லிஷ் 85 ஓட்டங்களும் இறுதியில் ஷாபாஸ் அகமது 43 ஓட்டங்களும் சேர்த்தனர்.
சென்னை அணி சார்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும் அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 204 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 19.2 ஓவரில் 208 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சென்னை சார்பில், சஞ்சு சாம்சன் 28 ஓட்டங்களும் ருதுராஜ் 42 ஓட்டங்களும் அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 65 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே