180 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பு கிடையாது.

#SriLanka #Lanka4 #consumer #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
180 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பு கிடையாது.
இலங்கையில் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது

இதற்கமைய, திருத்தப்பட்ட புதிய மின்சாரக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை (மே 11) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகின்றன. யாருக்கெல்லாம் கட்டண அதிகரிப்பு இல்லை? நுகர்வோரில் 95 சதவீதமானோரைப் பாதிப்படையாத வகையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாதம் 180 அலகுகள் (Units) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

180 அலகுகள் வரையான பயன்பாட்டிற்கு கட்டண அதிகரிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்கள்: சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்கு (SMEs) இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.

யாருக்கெல்லாம் கட்டணம் உயரும்? அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு சுமார் 18 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

210 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 210 அலகுகளைப் பயன்படுத்துபவர்களின் கட்டணம் 9,570 ரூபாயிலிருந்து 11,330 ரூபாயாக உயரும்.

300 அலகுகளைப் பயன்படுத்துபவர்களின் கட்டணம் 17,220 ரூபாயிலிருந்து 20,330 ரூபாயாக அதிகரிக்கும். பாரிய தொழிற்சாலைகள்: பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு 18 சதவீத கட்டண உயர்வு அமுலாகிறது.

அரச நிறுவனங்கள்: சராசரியாக 11 சதவீத கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!