வளங்களைச் சரியாகப் பயன்படுத்த புதிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை.

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
வளங்களைச் சரியாகப் பயன்படுத்த புதிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை 'மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக' நியமிப்பதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகளை நீக்கி, மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

புதிய அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்: மக்கள் பங்களிப்புடன் மாவட்ட மட்டத்திலான சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.

அத்தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைக்க வசதி செய்தல். மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையே வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்தல்.

முக்கியமான புதிய திட்டங்களை அடையாளம் கண்டு அமைச்சுக்குப் பரிந்துரைத்தல். தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உரிய காலத்திற்குள் அவற்றை நிறைவு செய்ய உதவுதல்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4