கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை.

#SriLanka #Police #Body #Lanka4 #Investigations #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை.

வெல்லாவெளி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் வயல் வெளியொன்றிலிருந்து நபர் ஒருவர் நேற்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சின்னவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று காணப்படுவதாக வெல்லாவெளி காவல்துறை நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவர் கடந்த மே மாதம் 8ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வெல்லாவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!