நில உரிமைக்காக ஒன்றிணைந்த வடகிழக்கு: கேப்பாப்பிலவில் முக்கிய கலந்துரையாடல்!

#SriLanka #Lanka4 #land #North #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
நில உரிமைக்காக ஒன்றிணைந்த வடகிழக்கு: கேப்பாப்பிலவில் முக்கிய கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் இன்று (13.05.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நில உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த கள விஜயமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் செயற்பாட்டாளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல், வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் நிலப் பறிப்பால் பாதிக்கப்பட்ட மக்களும், சிவில் அமைப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் அதன் தற்போதைய நிலை. கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள்.

கேப்பாப்பிலவு மக்களின் நீண்டகால காணி மீட்புப் போராட்டம். வாட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தாபாய கடற்படை முகாமினால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகள்.

தனித்தனியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் "நில மீட்பிற்கான ஒருங்கிணைந்த செயலணி" ஒன்றை உருவாக்கி, பலமான கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

நில அபகரிப்புக்கு எதிராக வடகிழக்கு மக்கள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இச்சந்திப்பு மீள உறுதிப்படுத்தியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4