நீடிக்கும் கடும் மழை; அனர்த்த நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை.

#SriLanka #Lanka4 #HeavyRain #Disaster #Alert #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நீடிக்கும் கடும் மழை; அனர்த்த நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை.

தற்போது நிலவி வரும் கடும் மழைத்துடனான காலநிலை காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த அபாய எச்சரிக்கை நாளை (15) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்கள் இரண்டு கட்டங்களாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, காலி மாவட்டம்: நெலுவ பிரதேச செயலகப் பிரிவு. களுத்துறை மாவட்டம்: ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவு. அதேபோல், பின்வரும் மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பண்டாரவளை, ஹாலி-எல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகள்.

காலி மாவட்டம்: நியகம, தவலம மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கண்டி மாவட்டம்: தும்பனை, பஸ்பாகே, தொலுவ, யட்டிநுவர, உடபலாத, கங்க இஹல கோரளை, அக்குரணை, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர, புஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, ஹத்தரலியத்த, தெல்தொட்ட மற்றும் பன்வில பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, ரம்புக்கனை, கேகாலை, யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல பிரதேச செயலகப் பிரிவுகள்.

குருநாகல் மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு. மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்கை கோரளை மற்றும் ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்.

மாத்தறை மாவட்டம்: பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவு. மொனராகலை மாவட்டம்: வெல்லவாய, பிபிலை மற்றும் படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவுகள்.

நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், கொத்மலை வடக்கு மற்றும் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள்.​

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, அயகம, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் குருவிற்ற பிரதேச செயலகப் பிரிவுகள். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!