தீவிபத்து குறித்து பணிப்பாளர் சத்தியமூர்த்தியுடன் விசேட கலந்துரையாடல்.

#SriLanka #Jaffna #Hospital #Director #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தீவிபத்து குறித்து பணிப்பாளர் சத்தியமூர்த்தியுடன் விசேட கலந்துரையாடல்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று முக்கிய களஆய்வு ஒன்றினை மேற்கொண்டார்.

கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமடைந்த மருந்துக் களஞ்சியப் பகுதியை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட விதம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி அவர்களிடம் கேட்டறிந்ததுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் ஏனைய குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

வைத்தியசாலையின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அழுத்தங்களை உரிய தரப்பினருக்கு வழங்குவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!