விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற வாய்ப்பு; விசேட நட்டஈடு வழங்க அரசு தீர்மானம்

#SriLanka #government #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற வாய்ப்பு; விசேட நட்டஈடு வழங்க அரசு தீர்மானம்

இலங்கை மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் (VRS) தேர்ந்தெடுத்த ஊழியர்களுக்கு பாரிய நிதி இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்காக மொத்தமாக 8.5 பில்லியன் ரூபா (850 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களாக மின்சார சபையின் வளர்ச்சிக்கு உழைத்த ஊழியர்களைக் கௌரவமான முறையில் வழியனுப்பி வைப்பதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும்.

“பெருமைமிகு சேவை - பாதுகாப்பான முடிவு” (A Proud Service - A Safe End) எனும் தொனிப்பொருளில், இந்த இழப்பீடுகளை வழங்கும் விசேட நிகழ்வு நாளை (15) நடைபெறவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சார சபையின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், நிறுவனத்தின் வினைத்திறனை அதிகரிக்கவும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!