கம்பளை வீதி மூடப்பட்டது; மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்.

#SriLanka #Lanka4 #closed #Driver #Gampola #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கம்பளை வீதி மூடப்பட்டது; மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்.

மத்திய மலையகத்தின் கொத்மலை பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக, கொத்மலை – கம்பளை (B431) பிரதான வீதி இன்று (14) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டு வீதி சேதமடைந்திருந்த பரகம்மன பகுதியில், தற்போது பெய்து வரும் மழையினால் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த வீதியூடான போக்குவரத்துக்களை உடனடியாக நிறுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலைப்பாங்கான நிலப்பரப்பு ஸ்திரமற்ற நிலையில் உள்ளதால், குறித்த பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே வீதி மீண்டும் திறக்கப்படும் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!