21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை - முதலமைச்சர் விஜய் அதிரடி

#India #Tamil Nadu #children #Age #Lanka4 #Alcohol #Vijay #ChiefMinister #shop
Prasu
2 hours ago
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை - முதலமைச்சர் விஜய் அதிரடி
தமிழகத்தில் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகமிருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1778779143.jpg

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங் கள், பஸ் நிலையங்கள் அருகே இருந்த மதுபான கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுருந்தார். 

அவருடைய உத்தரவை செயல்படுத்தும் விதமாக 717 கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!