IPL M58 - மீண்டும் தோல்வியை தழுவிய பஞ்சாப் கிங்ஸ் அணி
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Punjab
#Mumbai
Prasu
2 hours ago
ஐபிஎல் 2026 தொடரின் 58வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில், பிரியன்ஷி ஆர்யா 22 ஓட்டங்களும் கூப்பர் கனோலி 21 ஓட்டங்களும் பிரப்சிம்ரன் சிங் 57 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 201 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை அணி சார்பில், ரோகித் சர்மா 25 ஓட்டங்களும் ரிக்கிள்டன் 48 ஓட்டங்களும் திலக் வர்மா 75 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )