அடுத்த 36 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
அடுத்த 36 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிப்பதாக வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது. 

 இன்று காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை ஆய்வின்படி, இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்திற்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால்  மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 150 மி.மீ. அளவிலான மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரம்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் உட்பட தெற்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 இதற்கிடையில், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!