எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்? - உலகச் சந்தை நிலவரத்தால் நெருக்கடி.

#SriLanka #prices #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்? - உலகச் சந்தை நிலவரத்தால் நெருக்கடி.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகள் காரணமாக, உலகச் சந்தையில் மசகு எண்ணெய்த் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. 

இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்குமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 106 டொலர்களைக் கடந்து விற்பனையாகிறது. 

கடந்த சில நாட்களாக நிலவும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் மே மாதம் தொடக்கத்தில் (மே 02) இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

தற்போது 92 ரக பெட்ரோல் 410 ரூபாவிற்கும், ஓட்டோ டீசல் 392 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. உலகச் சந்தை விலையேற்றம் மற்றும் உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, உலகச் சந்தையில் ஏற்படும் தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் டொலரின் பெறுமதி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அடுத்த கட்ட விலை திருத்தத்தின் போது (ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது அதற்கு முன்னராக) விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4