மத்திய கிழக்கு போர் சூழல் - கனடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுப்பு

#Canada #people #government #Travel #Lanka4 #Warning #Middle East
Prasu
3 hours ago
மத்திய கிழக்கு போர் சூழல் - கனடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்த கோடைக்கால சுற்றுலாப் பயணங்களின் போது உலகளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கனடிய மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழல், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்குச் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என கனடிய அரசாஙக்ம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது செல்லும் இடங்களில் உள்ளூர் சேவைகள் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அல்லது அந்தப் பிராந்தியத்தின் வழியாக மற்ற இடங்களுக்குப் பயணம் செய்பவர்களின் திட்டங்கள் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் சூழலில், அங்கேயே தங்குவதற்கும் மருந்துகளை வாங்குவதற்கும் தேவையான கூடுதல் நிதியை வைத்திருக்க வேண்டும் எனவும் கனடா அரசாங்கம் எவ்வித நிதியுதவியையும் வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!