மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Election
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
மாகாண சபை தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக நடைபெறும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (15) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்று கூற இயலாது என வலியுறுத்தினார்.
இந்த ஆண்டுக்குள் மாகாண சபை தேர்தல்கள் நடைபெற உள்ளன என்று கூறிய அவர், கவலைப்பட வேண்டாம். எப்போது என்று எங்களால் கூற முடியாது. அமைச்சு அதைச் செய்து வருகிறது” என மேலும் கூறினார்.