IPL M 59 - சென்னை அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக கார்த்திக் ஷர்மா 71 ஓட்டங்களும் சிவம் துபே 32 ஓட்டங்களும் ப்ரேவிஸ் 25 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 188 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.
லக்னோ அணி சார்பில், ஜோஸ் இங்லிஷ் ஓட்டங்களும் 36 மிட்செல் மார்ஷ் 90 ஓட்டங்களும் நிகோலஸ் பூரன் 32 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
(வீடியோ இங்கே )