கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஹிருணிகாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு

#Colombo #Arrest #Lanka4 #hirunika #Court #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஹிருணிகாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மற்றொரு சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இன்று (சனிக்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கோட்டை பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மற்றொரு நபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கான முறையான காரணங்களையோ அல்லது மருத்துவ சான்றிதழ்களையோ அவர்களது சட்டத்தரணிகள் சமர்ப்பிக்கத் தவறியதையடுத்து, கோட்டை நீதவான் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தை புறக்கணித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மற்றைய சந்தேகநபரைக் கைது செய்து அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4