போதைப்பொருள் தகராறு - பிரான்சில் 15 வயது சிறுவன் சுட்டுக் கொலை
#Death
#France
#drugs
#Lanka4
#GunShoot
Prasu
2 months ago
மேற்கு நகரமான நான்ட்ஸில் போதைப்பொருள் தொடர்பானதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளதாக பிரெஞ்சு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடிகளை அணிந்திருந்ததாகவும் தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுவனும் காயமடைந்த மூன்றாவது சிறுவனும் தற்போது ஆபத்தான நிலையில் இல்லை என்று நுனெஸ் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அவர் நம்பப்படுகிறது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே