பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆயிரத்தை கடந்தது!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், இதுவரை 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 162 பேர் தற்போது 5 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 192 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கிடையில், 2 பேரிடர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )